• Home
  • Tamil
  • Office Checklist
  • பணியில் எல்லைகளை நிறுவுங்கள்: வெற்றிகரமான வழிகள் மக்கள் தங்கள் பணியின் எல்லைகளை எவ்வாறு நிறுவுகிறார்கள் என்பதை விளக்கும் ஏழு வழிகள்

பணியில் எல்லைகளை நிறுவுங்கள்: வெற்றிகரமான வழிகள் மக்கள் தங்கள் பணியின் எல்லைகளை எவ்வாறு நிறுவுகிறார்கள் என்பதை விளக்கும் ஏழு வழிகள்

பணியில் எல்லைகளை நிறுவுங்கள்

உங்கள் பணி அட்டவணை மேலாண்மை செய்ய முடியாதவை என்று  நீங்கள் எப்போதாவது உணர்கிறீர்களா? உங்கள் முதலாளி உங்களுக்கு அறிவிப்பு கொடுக்கும் போது, உங்களிடம் நாடு சென்று பணியாற்றும் படி கேட்கிறாரா? ஒவ்வொரு பணிக்கும் நீங்கள் ஆம் என்று சொல்கிறீர்களா? ஒருவேளை இது போல் உங்களுக்குத் தோன்றினால், நீங்கள் அதிகப்படியான மற்றும் கட்டுப்பாட்டை மீறியதாக உணர்கிறீர்கள். வேலை அழுத்தமே பெரும்பாலான பெரியவர்களுக்கான கவலையின் முக்கிய ஆதாரமாக இருப்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், இதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பது அவசியமான ஒன்றாகும்.  மேலும் இதற்கான ஒரு முக்கிய தீர்வு பணியின் எல்லைகளை நிறுவுவதேயாகும்.  

நம்மில் பலர் பணிக்காக, பெரும்பாலான நேரத்தையும், நாட்களையும் செலவிடுகிறோம். ஆகவே, இந்த பணிச்சுமை, நம் தனிப்பட்ட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.  எனவே பணியிடத்தைச் சுற்றி எல்லைகளை உருவாக்குவது மிக முக்கியமானதாகும். இது உங்கள் முதலாளி, வாடிக்கையாளர் மற்றும் சக ஊழியர்களுக்கு நீங்கள் முக்கிய அங்கமாக இருப்பதைக் காட்டுகிறது.  உங்கள் சொந்த எல்லைகளை நீங்கள் மதிக்கும்போது, மற்றவர்களும் அதை மதிக்கத் தொடங்குவார்கள்.  உங்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை இது மக்களுக்குக் கற்பிக்கிறது. பணியில் எல்லைகளை நிறுவுவதற்கான ஏழு வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன, இதன் மூலம், நீங்கள் புத்திசாலித்தனமாக வேலை செய்து, மரியாதையைப் பெறுவதுடன் பணியில் உங்கள் செயல்திறனை அதிகரிக்கலாம். 

உங்கள் வரம்புகளை நிறுவுங்கள் 

பணியில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளைப் பற்றி ஒரு யோசனை கிடைத்தவுடன், உங்கள் வரம்புகளை நிறுவத் தொடங்குங்கள். உதாரணமாக, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை உங்கள் பணிக்கான மின்னஞ்சல்களைச் சரி பார்க்காமலிருந்தால், அந்த நேரத்தில் உங்கள் குடும்பத்தில் கவனம் செலுத்தலாம். 

உங்கள் உணர்ச்சி, மனம் மற்றும் உடல் எல்லைகளை தெளிவாக வரையறுக்கவும். இதைச் செய்யும் போது, நீங்களே முழு கவனம் செலுத்துவதுடன், உங்களால், செய்யக்கூடிய மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடியவற்றைக் கவனித்துச் செய்ய வேண்டும்.  கூடுதலாக, மேலும், உங்களுக்கு அசவுகரியத்தை மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விஷயங்களையும் ஒரு பட்டியலில் வைத்திருங்கள்.  

உங்கள் மதிப்புகளை அறிந்து கொள்ளுங்கள் 

உங்கள் மதிப்புகளைப் புரிந்துகொள்வது, வேலையில் எல்லைகளை நீங்கள் எங்கு நிறுவ விரும்புகிறீர்கள் என்பதைக் கண்டறிய உதவுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உங்கள் மதிப்புகளைப் புரிந்து கொள்வதால், மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் வழிமுறைகளை நீங்கள் அமைக்க முடியும். 

உதாரணமாக, தன்னார்வத் தொண்டு செய்வது அல்லது ஓட்டப்பந்தயங்களின் பங்கேற்பது போன்ற பல விஷயங்கள் உங்களுக்கு முக்கியமானதாக இருக்கலாம். இது போன்ற உங்களுக்கு விருப்பமான விஷயங்களில் நீங்கள் நேரத்தைச் செலவிட விரும்புவதால், கூடுதல் நேரம் வேலை செய்யும் போதும், எல்லா நேரங்களிலும் பணி செய்ய வேண்டிய நிலையிலும் உங்களது பணிக்கான எல்லைகளைக் கடுமையாகப் பராமரியுங்கள். 

தகவல் தொடர்புகளை தெளிவாக செய்யுங்கள் 

உங்களுக்கான பணியின் வரம்புகளை நிறுவியதும், இதுகுறித்து உங்கள் குழுவிடம் தெளிவாகவும் உறுதியாகவும் தெரியப்படுத்துங்கள்.  இதைச் செய்யும்போது மோசமாக உணர வேண்டாம். பணியிடத்தில் உள்ள அனைவருக்கும் அவர்களின் எல்லைகளை நிறுவ உரிமை உண்டு. மறுபுறம், ஒருவருக்கொருவர் எல்லைகளை மதிக்க வேண்டியது அவசியம். 

உதாரணமாக, உங்கள் குழு உறுப்பினர்கள், பணி தொடர்பாக எல்லா நேரத்திலும் உங்களைத் தொடர்பு கொள்வதை நீங்கள் விரும்பவில்லை என்றால், வேலை உரையாடல்களுக்கு நீங்கள் எப்போது தயாராக இருப்பீர்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள். பணிக்காக வரையறுக்கப்பட்ட எல்லை மீறப்படும்போது, உடனடியாக அதைச் சரி செய்யுங்கள். காத்திருப்பதை விட, இந்த நேரத்தில் உங்கள் வரம்புகளை வலுப்படுத்துவது நல்லது. 

பணி வரம்பு அல்லது மீறலைச் சரியான வழியில் கொண்டு வாருங்கள் 

அவர்களின் வரம்புகள் மீறப்படும்போது, மக்கள் வருத்தமடைவார்கள் என்பது அசாதாரணமானது அல்ல. அவர்கள் அதை பல நாட்கள் யோசித்து ஒரு மாதத்திற்குப் பிறகு கொண்டு வருகிறார்கள். இந்த நேரத்தில் உங்கள் வரம்புகளை வலுப்படுத்துவது முக்கியம், ஏனென்றால் நீங்கள் இதைச் செய்யவில்லை என்றால், அது அதன் சக்தியை இழந்து விடும்.  

உதாரணமாக, உங்கள் சக ஊழியர்கள் மற்றொரு சக ஊழியர்களைப் பற்றி கிசுகிசுக்க விரும்பினால், நீங்கள் அதைக் கேட்க விரும்பவில்லை என்றால், அதை அவர்களிடம் அமைதியாகவும் கண்ணியமாகவும் சொல்லுங்கள். நீங்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்க விரும்பவில்லை என்று அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர்கள் பேசுவதை நீங்கள் கேட்க விரும்பவில்லை என்று அவர்களுக்குச் சொல்வதை விட இப்போதோ சொல்லி விடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

வசதியாக பணியாற்றுவதற்குத் தயாராகுங்கள் 

நீங்கள் பணியில் வரம்புகளை நிறுவியதும், மற்றவர்கள் எதிர்மறையாகச் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இது எல்லைகள் அவசியமானவை மற்றும் அவை திறம்படச் செயல்படுகின்றன என்பதற்கான அறிகுறியாகும்.  உங்கள் எல்லைகள் மீறப்படுகின்றன என்பதையும், அந்த சூழ்நிலைகளை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்வீர்கள் என்று கற்பனை செய்வது பார்த்துக் கொள்வதற்கு இது உதவியாக இருக்கும். 

அந்த வகையில், இதுபோன்ற சூழ்நிலை வரும்போது, நீங்கள் அதை உணர்ச்சி வசப்பட்டுவதை விடப் பகுத்தறிவுடன் கையாள முயலவேண்டும். மகிழ்ச்சியான மற்றும் அதிக உற்பத்தி செய்யும் ஊழியர்கள் எல்லைகளை நிர்ணயம் செய்வார்கள்.  வரம்புகளை நிர்ணயிக்கும் நபர்கள், தங்களுக்கு தாங்களே மதிப்பு கொடுக்கிறார்கள் என்பதால், மற்றவர்களிடமும் மரியாதையைப் பெறுவார்கள். 

கட்டமைப்புகளை உருவாக்குங்கள் 

ஒரு கட்டமைப்பை உருவாக்குவதற்கும் அதன் மூலம் வரம்புகளை நிறுவுவதற்கும் ஒரே வழி நிகழ்ச்சி நிரலை வைத்திருக்க வேண்டும். நிகழ்ச்சி நிரல் மிகவும் திறமையானது, மேலும் இது உங்களை நிறுவனத்தில் ஒரு நிபுணராக நிலைநிறுத்தும். நிகழ்ச்சி நிரலை அமைக்கும் போது, விவாதிக்கும் தலைப்புகளுடன், தொடக்க மற்றும் இறுதி நேரத்தையும் குறிப்பிட வேண்டும்.  

ஒரு கட்டமைப்பை உருவாக்க மற்றொரு வழி கூட்டத்தை நடத்துவதாகும்.  

உறுதியான விளக்கங்களில் கவனம் செலுத்துங்கள் 

வேலையில் நீங்கள் ஒரு எல்லையை நிறுவும்போது, அதைப் பற்றி உங்கள் தனிப்பட்ட கண்ணோட்டம் குறித்துப் பேசுவது அவசியமான ஒன்றாக இருக்காது.  வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உங்கள் முதலாளி, நியாயமற்ற முறையில் ஒரு கோரிக்கையை விடுத்தால், ‘நான் மிகவும் அழுத்தமாக இருக்கிறேன்’ அல்லது ‘எனக்கு நிறைய வேலை நிலுவையில் உள்ளது’ என்று பதில் சொல்வதை நிறுத்துங்கள். 

இது அதிக பணிகளைச் செய்வதற்குத் தயங்குகிறீர்கள், என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தி விடும்.  அதற்குப் பதிலாக, உங்கள் விளக்கங்களை உறுதியாகவும், மற்ற திட்டங்கள், வாடிக்கையாளர்கள் அல்லது உங்கள் கீழ் பணியாற்றுபவர்களை எவ்வாறு பாதிக்கப் போகிறது என்பதை விளக்கமாகத் தெரிவிக்கும் வகையில் தயார் படுத்திக் கொள்ளுங்கள்.  

வேலையில் எல்லைகளை நிறுவுவது முக்கியம். இருப்பினும், உங்கள் பணிச்சூழல் முற்றிலும் மோசமாக இருப்பதுடன், கடுமையான பணியைச் செய்த போதும் முடிவில் நீங்கள் எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை என்றால், அந்த சூழ்நிலையை விட்டு வெளியேறுவது பற்றிச் சிந்திக்கத் தொடங்க வேண்டிய நேரமாக இது இருக்கும்.  

EZJobs செயலி என்பது, உள்ளூர், பகுதிநேர மற்றும் பருவகால வேலைகளுக்கான, முதலாளிகள் மற்றும் வேலை தேடுபவர்கள் இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய வேலைவாய்ப்பு தளமாகும். நீங்கள் இன்று EZJobs செயலியை பதிவிறக்கம் செய்து உடனடியாக உங்களைச் சுற்றியுள்ள வேலைவாய்ப்புகளை காணலாம். 

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *