'ஐந்து ஆண்டுகளில் நீங்கள் எந்த நிலையில் இருப்பீர்கள்' என்பதற்கான பதிலுக்கான ரகசியம்

'ஐந்து ஆண்டுகளில் நீங்கள் எந்த நிலையில் இருப்பீர்கள்' என்பதற்கான பதிலுக்கான ரகசியம்

மனிதவள மேம்பாட்டுத் துறை நடத்தும் அனைத்து நேர்காணல் கேள்விகளிலும், இது மிகவும் தந்திரமான ஒன்றாகும். ‘இப்போது இருந்து ஐந்து ஆண்டுகளில் நீங்கள் உங்களை எந்த நிலையில் பார்ப்பீர்கள்?’ இதை ஒப்புக் கொண்டால் லேசாகப் புன்னகை செய்யுங்கள்.  நேர்காணல் செய்பவர் இந்த கேள்வியைக் கேட்கும்போது, அவருடைய முக்கிய நோக்கம் வேலைக்கான உங்கள் உறுதிப்பாட்டைச் சோதிப்பதாகும். இந்த கேள்வி, உங்களை அச்சுறுத்துவதுடன், மனதை மயக்கும் என்று நம்பப்படுகிறது. உங்களை நேர்காணல் செய்பவர், உங்களது உண்மையான திட்டங்களில் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எதிர்பாராத கேள்விகளுக்கு நீங்கள் எவ்வாறு பதிலளிக்கிறீர்கள் என்பதை அவர்கள் சோதிக்க விரும்புகிறார்கள். நேர்காணல் செய்பவர்கள் உங்கள் நம்பிக்கை, ஆசைகள் மற்றும் தொழில் கண்ணோட்டங்களின் அடிப்படையில் உங்களை மதிப்பிட விரும்புகிறார்கள்.

உங்களை பணியில் சேர்த்துக் கொள்ளும் மேலாளர்களுக்கு, அவர்களின் நிறுவனத்தில் நீங்கள் நீண்ட காலம் இருக்க முடியுமா? அல்லது ஒரு சில மாதங்கள் அல்லது ஒரு ஆண்டிற்குப் பிறகு நீங்கள் வெளியேற வேண்டுமா? என்பதையும் கணக்கிட இது உதவுகிறது. உங்கள் பதிலுடன் நீங்கள் நேர்மையாக இருக்க வேண்டும், ஆனால், அது உங்கள் வேலை மற்றும் தொழிலுக்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும். இது போன்ற தந்திரமான கேள்விக்குப் பதிலளிக்க உதவும் சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. 

வேலையில் உங்கள் ஆர்வத்தைப் பற்றி விவாதிக்கவும்

குழந்தைத்தனமாக நடந்து கொள்ள வேண்டாம்  உங்களைப் பணி அமர்த்தும் மேலாளர்கள், குறைந்தபட்சம் ஓரிரு வருடங்கள் அந்த வேலையில் மகிழ்ச்சியாகவும், திறமையாகவும் செயல்படும் ஒருவரையே விரும்புவார்கள். உங்கள் ஆர்வங்களை வலியுறுத்துவது மற்றும் உங்கள் முந்தைய வேலையில் நீங்கள் திறமை பெற்றிருக்கிறீர்கள் என்பதைக் காட்டுவது பெரும்பாலும் சாதகமாகவே இருக்கும். 

நீங்கள், உங்கள் முதல் வேலைக்கான நேர்காணலில் கலந்து கொள்கிறீர்கள் என்றால், அந்த வேலையைச் செய்ய நீங்கள் எவ்வளவு ஊக்கமளிக்கிறீர்கள் என்று நேர்காணல் செய்பவர்கள் கேள்வி எழுப்பலாம். நீங்கள் வேலையில் எவ்வளவு தீவிரமாக இருக்கிறீர்கள் என்பதைக் காட்டினால், பணியமர்த்தல் மேலாளர் மற்றவர்களை விட உங்களை நிச்சயமாகத் தேர்ந்தெடுப்பார்.

தொழில் பாதையை கோடிட்டுக் காட்டுங்கள்

இந்த கேள்விக்கு நன்கு தயார் செய்ய, நீங்கள் விண்ணப்பிக்கும் நிலையிலிருந்து ஒரு நியாயமான வேலைக்கான பாதையை ஆராயுங்கள். ஒருவர் வழக்கமாக எவ்வளவு நேரம் அந்த வேலையில் செலவிடுகிறார் என்று கண்டுபிடிக்கவும்? அடுத்த ஐந்து ஆண்டுகளில் நீங்கள் மாற விரும்பும் திட்டம் என்ன?

சில முதலாளிகள் தங்கள் வலைத்தளத்தில், தொழில் பிரிவில் வேலைக்கான விபரங்களைத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டுவார்கள். இருப்பினும், இந்த வேலை பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ள நீங்கள் முன்னாள் மாணவர்கள், குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் மூலம் இந்தத் துறையில் உள்ள நிபுணர்களை அணுக வேண்டியிருக்கலாம்.

உங்கள் தொழில் இலக்குகளை குறிப்பிடவும்

நிறுவனத்திற்காக நேர்காணல் நடத்துபவரைப் போன்று, நீங்கள் மாற வேண்டும் என்பதே உங்களது குறிக்கோள்களில் ஒன்று என்று தெரிவியுங்கள். உங்கள் சொந்த இலக்குகளின் சாதனைகள் மூலம் நிறுவனத்திற்கு நீங்கள் எவ்வாறு மதிப்பைச் சேர்ப்பீர்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள். மேலும், இந்த நிறுவனத்தில் பணிபுரிவது உங்கள் இலக்குகளை அடைய உதவும் என்று நேர்முகத் தேர்வாளரை நம்ப வையுங்கள். இது  உங்களது வெற்றிக்கான சூழ்நிலையை உருவாக்கும். 

நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளுங்கள்

நேர்காணல் செய்பவர் உங்களை நம்பும் விதத்தில் உங்களது பதிலை வடிவமைப்பது எப்போதும் நல்லது. உங்களை சந்தித்த பிறகு, அவர் நிறுவனத்திற்கு சரியான நபரை சந்திக்கிறார் என்று அவர் நினைக்க வேண்டும். நீங்கள் நேர்மறையானவர் என்றும், உங்களது இலக்குகளுடன் நிறுவனத்தின் இலக்குகளை அடைவீர்கள் என்று கூறுங்கள்.  அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீங்கள் இதை நிறுவனத்தில் பணியாற்றுவீர்கள் என்பதை முதலாளிக்குத் தெரியப்படுத்துங்கள்.

நீங்கள் உங்கள் தொழிலில் அர்ப்பணிப்புடன் இருப்பீர்கள் என்பதை அவருக்குத் தெரியப்படுத்துங்கள், பணியில் நீங்கள் உங்களால் முடிந்த அளவுக்குச் சிறந்ததை வழங்குங்கள். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளீர்கள் என்று அவரிடம் சொல்லுங்கள். நிறுவனத்தின் வேலைகளுக்கு ஏற்ற வகையில் உங்கள் திறன்களை மேம்படுத்துங்கள். 

எதிர்மறை எண்ணங்களுடன் இருக்க வேண்டாம்

நேர்காணலின் போது “எனக்குத் தெரியாது” என்று சொல்வது மோசமான விஷயமாக இருக்கும்.  உங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்றாலும், எதிர்மறையான வார்த்தைகளில் பதிலளிக்க வேண்டாம். கேள்விகளுக்குப் பதிலளிக்க சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டு கேள்வியைப் பற்றிச் சிந்தியுங்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் நீங்கள் எந்த வழிகளில் முன்னேற முடியும் என்று சிந்தியுங்கள்.

அதீத நம்பிக்கையுடன் பதிலளிக்க வேண்டாம். உண்மையில், நீங்கள் ஒருபோதும் குறைவாக தீர்வு காணக்கூடாது, ஆனால் ஒரு நேர்காணலின் போது உங்களை மிகைப்படுத்தாதீர்கள். உங்கள் நண்பர்களும் குடும்பத்தினரும் நீங்கள் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கத் தகுதியானவர் என்றும், நீங்கள் சிறந்தவர் என்றும் சொன்னாலும், அது உண்மையாகும் வரை யதார்த்தத்தை இன்னும் வெளிப்படுத்த வேண்டாம். 

தெளிவான வேலைக்கான பாதை இல்லாதபோது

எல்லா வேலைகளும் உயர் பதவிகளுக்குக் படிகற்கள் அல்ல. உதாரணமாக, ஆலோசனை, விற்பனை, நிகழ்வு திட்டமிடல், கற்பித்தல் மற்றும் கணினி நிரலாக்கம் போன்ற நிலைகள் போன்றவை. உங்கள் ஐந்து வருட இலக்காக அந்த வேலையின் தேர்ச்சியை வலியுறுத்துவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். 

உண்மையான மற்றும் இயற்கையானது என்று தோன்றும் பதிலை உருவாக்குங்கள்.  உங்களை நேர்காணல் செய்பவர், நீங்கள் பொய் சொல்வதையோ, அமைதியாக இருப்பதையோ அல்லது கேட்டும் கேள்விக்குச் சம்பந்தம் இல்லாத பதில் அளிப்பதையோ விரும்புவதில்லை.  எனவே, கேள்விகளுக்குச் சிறந்த பதிலை வழங்குங்கள். இது நேர்காணல் செய்பவரைக் கவர்வது மட்டுமல்லாமல், நீங்கள் வேலைக்குத் தயாராகவும், வேளையில் சேர உறுதியாகவும் இருப்பதையும் அவர்களுக்குக் காண்பிக்கும்.

வாழ்த்துகள்!

EZJobs செயலி என்பது, உள்ளூர், பகுதிநேர மற்றும் பருவகால வேலைகளுக்கான, முதலாளிகள் மற்றும் வேலை தேடுபவர்கள் இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய வேலைவாய்ப்பு தளமாகும். நீங்கள் இன்று EZJobs செயலியை பதிவிறக்கம் செய்து உடனடியாக உங்களைச் சுற்றியுள்ள வேலைவாய்ப்புகளை காணலாம்.

Job Seeker ?
Download & apply

Recent Articles

Follow us on

Related Blogs

Do you want the right
employees in your team?

Do you want the right
employees in your team?