• Home
  • Tamil
  • Jobs Near You
  • இந்தியாவில் நீலம் மற்றும் சாம்பல்-காலர் வேலைகளுக்கான சந்தை

இந்தியாவில் நீலம் மற்றும் சாம்பல்-காலர் வேலைகளுக்கான சந்தை

இந்தியாவில் நீலம் மற்றும் சாம்பல்-காலர் வேலைகளுக்கான சந்தை

இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடாக இருப்பதுடன், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான தகுதி வாய்ந்த மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலைவாய்ப்பு சந்தையில் அடியெடுத்து வைக்கின்றனர்.  நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்குப் பலவகையான வேலை வாய்ப்புகளை வழங்குகிறது, இது இளம் மற்றும் ஆர்வமுள்ள தனி நபர்களுக்கு வேலை வாய்ப்புக்கான சிறந்த இடமாகவும் விளங்குகிறது.  

வேலைக்கு விண்ணப்பம் செய்பவர்களின் திறமையைப் பொறுத்து அவர்களுக்கான வேலைகள், நீல, வெள்ளை மற்றும் சாம்பல் காலர் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.  இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் நீல மற்றும் சாம்பல் – காலர் வேலையின் தன்னமைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. 

அறிமுகம் 

நிறுவனங்களில் பணியாற்று ஊழியர்களின் திறமை மற்றும் அவர்களது பணியின் தன்மையைப் பொருத்து, நீல, வெள்ளை மற்றும் சாம்பல் காலர் ஊழியர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.  

வெள்ளை – காலர் வேலைகள் எழுத்தர், நிர்வாக மற்றும் மேலாண்மை பதவிகளுடன் தொடர்புடையவை, அதே நேரத்தில் நீல – காலர் வேலைகள் தொழிலாளர் – வர்க்க ஊழியர்கள், கடுமையான உடல் உழைப்பை வெளிப்படுத்தும் ஊழியர்களுடன் தொடர்புடையவை.  

நீல-காலர் ஊழியர்களின் வேலைகள், நீல மற்றும் வெள்ளை – காலர் ஊழியர்களுக்கான வேலைகளின் கலவையாக இருக்கும். இந்த வேலைகளில் ஈடுபடும் ஊழியர்கள், மேற்கூறிய இரு வேலைகளைச் செய்யும் இயல்புகளைக் கொண்டிருப்பார்கள்.  

நீலகாலர் ஊழியர்களுக்கான வேலைகள் 

வேகமாக வளர்ந்து வரும் இகாமர்ஸ் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறைகளால், இந்தியாவில் நீல-காலர் ஊழியர்களுக்கான வேலை வாய்ப்புகள் ஏற்றம் கண்டு வருகிறது.  தொழில்நுட்ப அறிவு மற்றும் எலக்ட்ரீசியன்ஸ், பிளம்பர்ஸ், ஹார்ட்வேர் பழுதுபார்ப்பு போன்ற திறன்களைக் கொண்டவர்கள் மற்றும் பயன்பாட்டு டெவலப்பர்கள், புதிய வேலை வாய்ப்புகளுடன் தங்கள் திறமைகளை டிஜிட்டல் வாயிலாக வெளிப்படுத்த புதிய வாய்ப்புகளைக் கண்டறிந்துள்ளனர். 

விவசாய வேலைவாய்ப்பு வீழ்ச்சி மற்றும் ஒவ்வொரு ஆண்டும் வெளியேறும் புதிய பட்டதாரிகள் ஆகியவற்றின் காரணமாக இந்தியாவில் நீல-காலர் ஊழியர்களின் எண்ணிக்கை விரைவில் 300 மில்லியனாக உயர உள்ளது.  

போதுமான அனுபவம் மற்றும் கல்வித் தகுதிகள் இல்லாதவர்களே நீல-காலர் வேலைகளை நாடுகிறார்கள், குறிப்பாக அவர்கள் உற்பத்தி, சில்லறை வணிகம், இகாமர்ஸ் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் ஆகிய துறைகளில் கவனம் செலுத்துகிறார்கள், அவர்களை ஈர்க்க நல்ல வேலை தொகுப்புகளை, இந்த துறைகள் வழங்குகின்றன. 

இளம் தலைமுறையின் விரைவாகப் பணம் சம்பாதிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.  கூடுதலாக அவர்கள், தங்களின் கல்லூரி படிப்புக்கு இடையே பகுதி நேர வேலை செய்ய ஆர்வம் காட்டுவதுடன், பகுதி நேர வேலை வாய்ப்புகளைத் தேட தொடங்குகின்றனர்.  நீல – காலர் வேலையைச் செய்யும் ஊழியர்களில் 35% பேர் சராசரியாக ரூ.15 – ரூ.20 ஆயிரம் சம்பளம் பெறுவதாக கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. 

நீல காலர் வேலைகளில் கொரோனாவின் தாக்கம் 

கொரோனா தொற்றுநோய் இந்தியாவில் நீல மற்றும் சாம்பல் காலர் வேலைகளைப் பெரிதும் பாதித்துள்ளது. பெங்களூர், மும்பை, சென்னை, டெல்லி போன்ற 1-ஆம் அடுக்கு நகரங்களில் பெரும்பாலான நீல – காலர் வேலைகள் குவிந்துள்ளன. 

தொற்றுநோய் காரணமாக நிறுவனங்கள், தங்கள் தொழிலாளர்களைக் கணிசமாகக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  மேலும், தொற்று நோய் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், 40% நீல – காலர் மற்றும் சாம்பல்- காலர் ஊழியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியதுடன், தங்கள் வேலைகளையும் இழந்தனர். கொரோனா பரவல் காரணமாக 1 மில்லியன் மக்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளதுடன், ரூ. 2467கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தொற்றுநோயிலிருந்து சந்தை மெதுவாக மீண்டு வருகிறது, நிறுவனங்கள் இழப்புகளிலிருந்து திரும்பி தங்கள் வணிகங்களை மீண்டும் புதுப்பித்து வருகின்றன. ஊழியர்கள் தங்கள் அலுவலகங்களில் வேலையை மீண்டும் தொடங்கியுள்ளதால், நீல மற்றும் சாம்பல் – காலர் ஊழியர்களின் தேவை வேகமாக வளர்ந்து வருகிறது. பெங்களூரில் உள்ள நிறுவனங்களில் 90% நிறுவனங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள், நீல – காலர் வேலைகளுக்காக அதிக ஊழியர்களை நியமிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

நீலம் மற்றும் சாம்பல்காலர் பணிக்கான சந்தையில் ஏற்பட்டுள்ள டிஜிட்டல் முன்னேற்றங்கள் 

தொற்றுநோய்களின் தாக்கத்திலிருந்து மெதுவாக மீண்டு வரும் நிறுவனங்கள், பல்வேறு துறைகள் மற்றும் பிரிவுகளில் நீல மற்றும் சாம்பல் – காலர் வேலைகளுக்காக புதிய ஊழியர்களை பணியமர்த்தத் தொடங்கியுள்ளனர்.  தொற்று நோயின் காரணமாக வேலையில்லாத நிலைக்குத் தள்ளப்பட்ட மில்லியன்கணக்கான மக்கள், புதிய வேலைகளைத் தீவிரமாகத் தேட தொடங்கியுள்ளனர்.  

தீவிரமாக வேலையைத் தேடும் ஊழியர்களின் முயற்சியை , மோசடியான வேலை வாய்ப்பு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. இந்த நிறுவனங்கள் வேலை வாங்கி கொடுத்து உதவுவதாகக் கூறி, ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் தொகை அல்லது ஒரு நிலையான சதவீதத்தை எடுத்துக்கொள்கிறார்கள். இத்துறையின் அமைப்புசாரா தன்மையுடன் 1% மக்கள் மட்டுமே சரியான வங்கி வசதிகளைக் கொண்டிருப்பதால், அத்தகைய ஏஜென்சிகள் மற்றும் இடைத்தரகர்கள் வேலை தேடுபவர்களைக் கையாளுவதை எளிதாக்குகிறது. 

WorkIndia போன்ற நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தின் பணியமர்த்த உள்ள ஊழியர்களுடன் எந்த அபத்தமான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் இல்லாமல் நேரடியாக தொடர்பு கொள்ள உதவும் வகையில் பிரத்தியேக டிஜிட்டல் தளங்களை அமைத்துள்ளன. இத்தகைய டிஜிட்டல் தளங்கள் நீல மற்றும் வெள்ளை – காலர் வேலைகளில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன, ஆட்சேர்ப்பு செய்வதற்கு பணத்தை வீணாக்காமல் வேலை வாய்ப்புகளுக்கான நேரடி அணுகலை இத்தகைய டிஜிட்டல் தளங்கள் வழங்குகின்றன. வேலை தேடும் ஊழியர்களை, போலி வேலை வாய்ப்பு நிறுவனங்கள் மோசடி செய்வதிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், நிறுவனங்கள் இந்த போலி வேலை வேலைவாய்ப்பு நிறுவனங்களை ஆன்லைன் சந்தையிலிருந்து அகற்றுவதில் கவனம் செலுத்துகின்றன.  

வேலை வாய்ப்பு ஆலோசனை வழங்கும் நிறுவனங்களாக சுமார் 1.5 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளதாக, இதுதவிர இந்த எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகமாகச் சட்டவிரோதமாகச் செயல்படும்வேலை வாய்ப்பு ஆலோசனை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை இருப்பதாகவும் அவர்கள் மதிப்பீடு செய்துள்ளனர். வேலை ஆர்வலர்கள் இந்த ஆன்லைன் தளங்களினால் கணிசமாகப் பாதிக்கப்படுவதாகவும், வேலை வாங்கி கொடுப்பதற்காக அதிக நுழைவு கட்டணங்களை வசூல் செய்வது அல்லது வேலைக்கான வாங்கி கொடுத்தும், அவர்களின் ஊதியத்தில் ஒரு நிலையான சதவீதத்தைப் பெறுகிறார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆர்வமுள்ள, வறுமையில் வாடும் இளைஞர்கள் சுரண்டப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இயங்குவதுடன், வேலை வழங்குபவர் மற்றும் வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்களை இணைப்பதில் டிஜிட்டல் சேவைகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. 

கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் நீல மற்றும் சாம்பல்காலர் வேலைகளுக்கான நோக்கம் 

நீல மற்றும் சாம்பல் – காலர் வேலைகளுக்கான எதிர்கால நோக்கம் தெளிவற்றதாக உள்ளது. நன்கு படித்தவர்கள் மற்றும் சாதரான மக்கள் என இருதரப்பு மக்களும் இரு வேறுபட்ட சிந்தனைகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு, வேலை வாய்ப்புகளில் சந்தேகம் மற்றும் அமைதியின்மையை ஏற்படும் வகையில் கருத்துகளைப் பதிவிடுகின்றனர்.  

பணி செயல்முறைகளில் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் பணி செயல்முறைகளில் தானாக இயங்கும் இயந்திரங்களைச் செயல்படுத்தப்படுவதால், குறைவான திறன் மற்றும் நேரத்தை அதிக அர்ப்பணிப்பு தேவைப்படும் வழக்கமான மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய பணிகளுக்கு மனிதர்களை பணியமர்த்தும் நிலை குறைகிறது. 43% நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அந்த ஊழியர்களுக்கு பதிலாக தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு முறையை மாற்றாக கொண்டு நீண்ட கால செலவுகளை குறைக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பிந்தைய வணிகங்களை விரைவாக மீட்டெடுப்பதை வலியுறுத்துகின்ற நிறுவனங்களும் உள்ளன. மேலும், இது நீல மற்றும் சாம்பல் – காலர் வேலைகள், குறிப்பாக மெட்ரோ நகரங்களில் மீண்டும் வேலைவாய்ப்பு பெறுவதற்கான நம்பிக்கையின் பிரகாசமான அறிகுறியாகக் கருதப்படுகிறது.  இந்த கடினமான காலங்களில் ஊழியர்களுக்கு உதவ 200 மில்லியன் நீல மற்றும் சாம்பல் – காலர் வேலைக்கான ஆர்வலர்களை நியமிப்பதை உறுதி செய்யும் வகையில் என். ஐ. டி. ஐ. ஏ. ஓ. சி போன்ற அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 

முடிவுரை 

தொற்றுநோய் சமூகத்தின் மேல் மற்றும் கீழ் மட்ட மக்களைப் பாதித்துள்ளது, அதே நேரத்தில், ஏழைகளின் குறுகிய கால சிக்கல்களையும், பணக்காரர்கள் சற்று கால தாமதத்திற்குப் பின்னர் சிக்கல்களை எதிர் கொள்கின்றனர். Gig திட்டங்கள் பெரும்பாலும் நீல மற்றும் சாம்பல் நிற வேலைகளை வழங்குவதில் மிகச்சிறப்பாகச் செயல்படுகின்றன, மேலும், அவை விரைவில் வளர்ந்து வரும் வேலைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கொரோனாவுக்குமுந்தைய நிலைகளுக்குத் திரும்பு உதவுகின்றன.  வளர்ந்து வரும் இந்த பொருளாதாரத்தில், தங்கள் வாழ்க்கையில் முன்னேற விரும்புபவர்களுக்கான வேலை வாய்ப்புகள் எப்போதும் இருக்கும், மேலும் அதை அடைய அவர்கள், தங்கள் திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டு, வேலை வாய்ப்புகளைப் பெறத் தயாராக இருக்க வேண்டும்.  

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *